Breaking News

ரவிக்கு எதிராக வழக்கு தொடர தயாராகும் சட்ட மா அதிபர்

 

அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக எதிர்காலத்தில் வழக்கு தொடரவிருப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் பொய்யான சாட்சி வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பில் சீ.ஐ.டியால் தொடரப்பட்ட வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ரவி மற்றும் அவரது மகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யவிருப்பதாகவும் அவர் தெரியப்படுத்தினார்.

வழக்கு விசாரணை ஜுன் மாதம் 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அதன்போது இந்த விசாரணை தொடர்பான சீ.ஐ.டியின் முன்னேற்ற அறிக்கையை முன்வைக்குமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.