Breaking News

ரயில் பணியாளர்கள் போராட்டம் – 40 சேவைகள் ரத்து

 

ரயில்வே பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துகின்றனர்.

இதனால் இன்று காலை ஆரம்பமாகவிருந்த 40 ரயில் சேவைகள் ரத்தாகின.

எனினும் யாழ்தேவி ரயில் சேவையும், 9 அலுவலக ரயில் சேவைகளும் இடம்பெற்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.