Breaking News

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துகிறார் மைத்ரி – கடமைக்கு திரும்பாதோர் தொழிலை இழக்கும் சாத்தியம் !

 

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி இன்று இரவு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் – ரயில் சேவையில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு கடமைக்கு திரும்பாத ஊழியர்கள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களாக கருதப்படுவார்களென தெரிகிறது.

இதற்கிடையில் ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் தற்காலிகமாக செயற்படும் ரயில் போக்குவரத்துக்கு பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.