உலகம்

மோடிதான் எங்களை ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களை பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளும் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர். மத்தியில் பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர்.

ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மாவை நாங்கள் இழந்து தவித்து வரும் நிலையில், பிரதமர் மோடிதான் எங்களுக்கு ‘டாடி’யாக இருந்து வழிகாட்டுகிறார் என்றார்.

மேலும், இந்தியாவை மோடியே மீண்டும் ஆள வேண்டும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடரவேண்டும் என கூறினார்.