இலங்கை

ரணிலை சந்திக்கிறது ஜே வி பி

 

ஜே வி பி யினருக்கும் பிரதமருக்குமிடையில் விசேட சந்திப்பொன்று நாளை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு சம்பந்தமாக நடைபெறும் இந்த சந்திப்பில் ஜே வி பி தலைவர் அனுரகுமார திசாநாயக்க, எம் பிக்களான விஜித ஹேரத் ,சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்

முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஜே வீ பி சந்தித்தமை குறிப்பிடத்தக்கது