Breaking News

ரணிலின் கூட்டத்தில் கலந்து கொள்ளாதிருக்க கட்சித் தலைவர்கள் பலர் முடிவு !

 

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் யார் என்பதை இறுதி செய்ய இன்று மாலை பிரதமர் ரணில் தலைமையில் நடக்கவுள்ள கூட்டத்தை ,பங்காளிக் கட்சித் தலைவர்கள் சிலர் புறக்கணிக்கவுள்ளனர் என அறியமுடிந்தது.

“கட்சித்தலைவர் என்ற ரீதியில் பிரதமர் ஒரு முடிவை எடுக்கும்வரை அதில் கலந்து கொண்டு நேரத்தை வீணடிப்பது அர்த்தமற்றது” என கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

சஜித் ஆதரவு அமைச்சர்களும் இதில் கலந்து கொள்ள வாய்ப்பில்லையென தெரிகிறது.