Breaking News

ரணிலா – சஜித்தா ? – ஆரம்பமானது சமர் !

 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சஜித் பிரேமதாஸவை அமர்த்தக் கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் 45 பேர் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளனர்.

ஏற்கனவே இன்று காலை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ள நிலையில் சஜித் ஆதரவு எம் பிக்கள் இந்த கடிதத்தை கையளித்துள்ளனர்.

இந்த பின்னணியில் பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சர்ச்சை எழலாமென தெரிகிறது.

ஆனால் இதனை தீர்மானிப்பதில் ஜே வி பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முக்கிய பங்கு வகிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.