Breaking News

ரஞ்சனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு !

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட மா அதிபர் ,கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளரை முன்னதாக அறிவுறுத்தியிருந்தார்.