Breaking News

ரஞ்சனுக்கு விளக்கமறியல் !

 

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனவரி 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கங்கொடவில நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அவரை கைது செய்ய கங்கொடவில நீதவான் நீதிமன்றம் நேற்று மாலை உத்தரவிட்டதையடுத்து
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

நீதிபதிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த காரணத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட மா அதிபர் ,கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளரை முன்னதாக அறிவுறுத்தியிருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த கைது நடந்தது.அதன் பின்னர் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார்