Breaking News

ரஞ்சனின் தொலைபேசி ஒலிப்பதிவு விவகாரம் – விசாரணைக்குழு அமைக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை !

ரஞ்சன் ராமநாயக்க எம் பியின் தொலைபேசி அழைப்புக்களின் ஒலிப்பதிவு விபரங்கள் வெளியாகி நீதித்துறை சர்ச்சைக்குள்ளாகியிருப்பதால் அவை பற்றி விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஆளுங்கட்சி எம் பிக்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் கேட்டுள்ளனர்.

அலரி மாளிகையில் இன்று இரவு நடந்த ஆளுங்கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஆளுங்கட்சி எம் பிக்கள் ஜனாதிபதியை சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அந்த தொலைபேசி அழைப்புகளில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நீதித்துறை பிரமுகர்கள் , பாதுகாப்பு அதிகாரிகளிடம் இந்த ஆணைக்குழு விசாரிக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.