Breaking News

ரஞ்சனின் ஒலிப்பதிவு குறித்து விசாரணைகள் ஆரம்பம் !

 

நீதித்துறை மற்றும் முக்கியமான அரசியல் பிரமுகர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவு வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகளின் பின்னர் பல முக்கியஸ்தர்கள் அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது .

இதேவேளை ரஞ்சனுடன் தொலைபேசியில் உரையாடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சி ஐ டியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர வெளிநாடு செல்ல முடியாதவாறு பிரயாணத் தடை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.