உலகம்

யேமன் தாக்குதல் உயிரிழப்பு 111ஆக அதிகரிப்புயேமனில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி முகாம் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மரிபிலpல் அமைந்துள்ள அல்-எஸ்டிக்பால் முகாமில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், தொழுகைக்கhக கூடியிருந்த வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹவுதி  கிளர்ச்சிக் குழுவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக, அரசாங்கம் குற்றம் சாட்டியது, எனினும் இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமான யேமனில் மோதலpல் இந்தத் தாக்குதலானது  மிகப்பெரிய தனித்தாக்குதலாக பதிவாகியுள்ளது.

சவுதி தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் செயற்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படைகளுக்கு இடையிலான மோதல் நாட்டை பேரழிவிற்கு இட்டுச் சென்றுள்ளது.

100,000 மக்களை பலியெடுத்துள்ள இந்த மோதல் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியைத்  தோற்றுவித்துள்ளது.