உலகம்

யுத்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன ; பொஸ்கோவுக்கு 30 வருட சிறை

போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதத்துக்கு எதிராக குற்றங்களின் அடிப்படையில் கொங்கோவின் முன்னாள் கிளர்ச்சித்தலைவரும் ‘டர்மினேட்டர்’ என்ற புனைப்பெயரை பெற்றவருமான பொஸ்கோ தகாண்டாவுக்கு 30 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடத்திய விசாரணைகளில் படுகொலைகள் பாலியல் வன்புணர்வு பாலியல் கொத்தடிமைஇ சிறுவர்களை படைகளில் பயன்படுத்தியமை  உட்பட்ட 18  குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 46 வயதான பொஸ்கோ தகாண்டா குற்றவாளியாக தீர்பளிக்கப்பட்டதன் அடிப்படையில் 30 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேவ குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைகளில் இதுவே நீண்டகாலத்தண்டனையென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் ருவாண்டாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பொஸ்கோ தகாண்டா சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.