உலகம்

யுக்ரெய்ன் விமானம் விபத்துக்குள்ளானதா? தாக்குதலா?ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் நேற்று இடம்பெற்ற விமான விபத்துக்கு பயங்கரவாத நடவடிக்கை அல்லது ஏவுகணைத் தாக்குதலுக்குரிய சாத்தியங்களும் காரணமாக இருக்கலாம் என யுக்ரெய்ன் அறிவித்துள்ளது.

தெஹ்ரான் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் தனது தொடர்பை இழந்த பின்னர் தீப்பிடித்த நிலையில் தரையை விழுந்து நொறுங்கியது.

முற்றாக எரிந்தது விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததை ஈரான் விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் எவ்வாறான தொழில்நுட்பக் கோளாறால் விமான விபத்து ஏற்பட்டது என்பதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இந்த விபத்துக்கு பயங்கரவாத நடவடிக்கை அல்லது ஏவுகணைத் தாக்குதலுக்குரிய சாத்தியங்களும் காரணமாக இருக்கலாம் என யுக்ரெய்ன் அச்சம் வெளியிட்டுள்ளது.