உலகம்

யுக்ரெயின் படையினரை விடுவிக்க ரஷ்யாவிற்கு உத்தரவு

ரஷ்யாவினால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட 24 யுக்ரெயின் கடற்படையினரையும், 3 கப்பல்களையும் விடுவிக்குமாறு சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
க்ரைமியா கடற்பரப்பில் வைத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர்கள் கப்பல்களுடன் கைது செய்யப்பட்டனர்.
2014ம் ஆண்டு யுக்ரெயினிடம் இருந்து க்ரைமியாவை பிரித்து ரஷ்யா தம்முடன் இணைத்துக் கொண்டது.
இந்தநிலையில் குறித்த கடற்படையினரையும் கப்பல்களையும் விடுவிக்குமாறு சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் ரஷ்யா இந்த தீர்ப்புக்கு கட்டுப்பட போவதில்லை என்று அறிவித்துள்ளது.