உலகம்

யுக்ரெயினின் புதிய ஜனாதிபதியாகும் நகைச்சுவை நடிகர்

நகைச்சுவை நடிகர் வொல்டிமிர் செசென்ஸ்கை, யுக்ரெயினின் புதிய ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவி ஏற்கவுள்ளார்.
யுக்ரெயினின் தலைநகர் கீவில் இதற்கான தேசிய நிகழ்வு நடைபெறவுள்ளது.
கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், அரசியல் முன்னனுபவம் இல்லாத செசென்ஸ்கை பாரிய வெற்றியை பதிவு செய்தார்.
இதன்மூலம் 2014ம் ஆண்டு முதல் அங்கு ஜனாதிபதியாக இருந்த பெற்றோ பொரொசென்கோவின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.