Breaking News

யாழ் மாநகர சபை மேயராக மணிவண்ணன் தெரிவு

யாழ் மாநகர சபை தேர்தலில் வி.மணிவண்ணன் வெற்றிபெற்றுள்ளார்.

உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு யாழ் மாநகரசபையில் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இம்மானுவேல் ஆனால்ட் போட்டியிட்டார். திடீர் போட்டியாளராக களமிறங்குவதாக மணிவண்ணன் நேற்றிரவு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆனல்ட்டிற்கு ஆதரவாக 20 வாக்குகளும், மணிவண்ணனிற்கு 21 ஆதரவாக வாக்குகளும் கிடைத்தன.

இந்நிலையில் ஈ.பி.டி.பியும் மணிவண்ணனை ஆதரித்திருந்தது.

யாழ் மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள எம்.ஏ.சுமந்திரன் அணியை சேர்ந்த ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதோடு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.