இலங்கை

யாழ் போதனா மருத்துவமனையில் ஒருவருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,  குறித்த அறையில் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த ஒருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவருக்கு கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில், யாழில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் மருத்துவமனையின் 3 ஆம் இலக்க அறையில் தங்கி சிகிச்சை பெற்றிருந்த நிலையில், அங்கு கடமையாற்றிய மருத்துவர்கள், தாதியர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் மருத்துவமனையின் அருகில் உள்ள விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.