இலங்கை

யாழ்.பல்கலை மாணவர்கள் நாளை முதல் புறக்கணிப்புப் போராட்டம்

– யாழ்.செய்தியாளர் –

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட மாணவர்களை அவர்களது வழக்குகளில் இருந்து முற்றாக விடுவிக்க வலியுறுத்தி நாளை முதல் அனைத்து கல்விச் செயற்பாடுகளையும் புறக்கணிக்கப் போவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது