இலங்கை

யாழ் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் ஐவர் கைது !

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 5 பேர் கைது பேர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின் வழிகாட்டலில் ,விசேட குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி முனசிங்க தலைமையிலான குழுவினர் இன்று நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 20 பவுன் தங்கம் நகைகளாகவும் .உருக்கப்பட்ட நிலையிலும் ,மற்றும் 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபா மண்ணில் புதைக்கப்பட்ட பணமும் மீட்கப்பட்டுள்ளது.சந்தேக நபர்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

-யாழ்.செய்தியாளர் –