Breaking News

யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியின் பேராளர் மாநாடு இடம்பெற்றுவரும் மண்டபம் முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் !

யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியின் பேராளர் மாநாடு இடம்பெற்றுவரும் மண்டபம் முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் !

தமிழரசு கட்சியின் மாநாடு நடைபெற்ற  யாழ்.வீரசிங்கம் மண்டபம் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரகளின் உறவுகள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இன்று(30) ஞாயிற்றுக்கிழமை இலங்கைத்தமிழ்அரசுக்கட்சியின்16 ஆவது தேசியமாநாடு யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்  சோ. சேனாதிராஜா  தலைமையில் மாநாடு ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருந்தது.

இதன் போது   காணாமல் போனவர்களின் உறவுகள்  வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டம் நடைபெறும் மண்டபத்தை சுற்றி  நெருங்காமல் கடும் பாதுகாப்பு போடப்பட்டது.

எனினும்  காணாமல் போன உறவுகளை தேடி போராட்டம் நடத்தி வரும் உறவுகள்  மண்டபத்தின் முன்பாக  வருகை தந்ததுடன் பல்வேறு கோசங்களை எழுப்பி தமிழ் தேசிய தலைமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் மண்டபத்தை நெருங்க விடாமல் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.