யாழில் மாதா சொரூபம் உடைப்பு !
-யாழ். செய்தியாளர்-
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் வேளாங்கண்ணி மாதா சொரூபம் இனந்தெரியாத நபர்களினால் இன்று அதிகாலை வீதியில் போட்டு உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதேவேளை குறித்த பகுதியில் பல மாதத்திற்கு முன்னர் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.