இலங்கை

யாழில் பல்வேறு அபிவிருத்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர் ரணில்

யாழ் நிருபர் –

யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

முதலாவதாக காலை 1௦ மணிக்கு யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கெலன் தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய வீடுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கையளித்தார். இந்த வீட்டு திட்டத்திற்கான அடிக்கல்லைத் திரைநீக்கம் செய்து வைத்ததுடன் வீடுகளையும் நாடா வெட்டி திறந்து வைத்து வீட்டு உபகரணங்களையும் பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

பின்னர் யாழ்ப்பாணம் முற்றவெளியில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட 23 ஆயிரத்து 11 பேர்களில் ஆரம்ப கட்டமாக 4500 பேருக்கான சமுர்த்தி நிவாரண உரித்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இந்த இரு நிகழ்வுகளிலும் அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன . தயாகமகே, விஐயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா , தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.