Breaking News

யாழில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் பலி !

 

யாழ்ப்பாணம் மானிப்பாயில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது யாழ் செய்தியாளர் சற்று முன் தெரிவித்தார்.

சோதனை நடவடிக்கை ஒன்றின்போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

சுடப்பட்டவர் வாள்வெட்டுக் கும்பலை சேர்ந்தவர் என  பொலிஸ் தரப்பு கூறுகிறது. பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மானிப்பாயில் 3 வாள்களும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டதாக தற்போது தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் , ஆவா குழு உறுப்பினர்கள் 5 பேர் தப்பி ஓடிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.