Breaking News

யாழில் தீயணைப்பு வாகனம் விபத்து – ஒருவர் பலி இருவர் படுகாயம்

அதிக வேகத்தில் சென்ற யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான தீ அணைப்பு வாகனத்தின் முன்பகுதி ரயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடம்புரண்ட நிலையில் அருகில் உள்ள காணிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

தீயணைப்பு வாகனத்தில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாகனம் யாழ்ப்பாணத்தில் இருந்து வாகனம் கடும் வேகமாக பருத்தித்துறை நோக்கி சென்ற நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

Thanks – Nirujan