Breaking News

யாழில் கடமைகளை பொறுப்பேற்றார் வடக்கு ஆளுநர் !

-யாழ் நிருபர்-
வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் ,இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்திற்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வருகைதந்த ஆளுநருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது .

அதனையடுத்து மதத் தலைவர்களின் ஆசிர்வாதத்தை தொடர்ந்து அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் தர்மலிங்கம் சித்தார்த்தன் வடக்கு மாகாண அவைத் தலைவர் சிவஞானம், யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட் ,இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் மாகாண அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.