Breaking News

யாருக்கு ஆதரவு?- நாளை முடிவெடுக்கிறார் தொண்டா..!

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது குறித்து நாளை தீர்மானம் எடுக்கிறார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் எம் பியுமான ஆறுமுகம் தொண்டமான்.

காங்கிரசின் தேசிய சபைக் கூட்டம் நாளை ஹட்டனில் நடக்கவுள்ளது.அந்தக் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கபபடவுள்ளது.

முன்னதாக ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச ,கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் பேச்சு நடத்தியிருந்தார் ஆறுமுகம் தொண்டமான் .அந்த பேச்சுக்களின் அடிப்படையில் நாளை இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.

நாளை கூடும் காங்கிரஸின் தேசிய சபை இறுதி முடிவை எடுப்பதற்கான அதிகாரத்தை கட்சித் தலைவருக்கு வழங்குமென சொல்லப்பட்டது.