இலங்கை

யட்டியாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- இருவர் பலி

யட்டியாந்தோட்டை – புலத்கொஹுபிட்டி பிரதான வீதியின் கௌனிவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டி ஒன்று கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதுண்டமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.