இலங்கை

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அநுராதபுர அலுவலகத்திற்கு தற்காலிக பூட்டு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அநுராதபுர மாவட்ட அலுவலகம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் சி.கே.அழகக்கோன் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் நிலவும் கொவிட்-19 வைரஸ் அபாயம் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பணியாளர்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.