உலகம்

மோடி தாயார் மக்களுக்கு நன்றி

மோடி தாயார் மக்களுக்கு நன்றி

ஹீராபா, மோடியின் தயார், நன்றி

 இந்திய லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமர் மோடி ஆட்சியமைக்கும் அளவில் முன்னிலை அளித்த இந்திய மக்களுக்கு மோடியின் தாயார், 95 வயதான ஹீராபா நன்றி தெரிவித்துள்ளார்.

லோக்சபா ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது முதலே, நாடெங்கிலும் பா.ஜ., அமோக முன்னிலை பெற்று வந்தது. பா.ஜ., தனித்து 288 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 340 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தநிலையில், குஜராத் காந்திநகரில் வசிக்கும் மோடியின் தாயார் ஹீராபா வீ்டருகே நுாற்றுக்கணக்கான மக்கள் திரண்டு ஆரவாரம் செய்தனர். அப்போது வீட்டிற்கு வெளியே வந்து மகிழ்ச்சியோடு கையசைத்த மோடியின் தாயார், நாடெங்கிலும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்த மக்களுக்கு உணர்ச்சிப்பெருக்குடன் நன்றி தெரிவித்தார்

dinamalar