இலங்கை

மோடி ஜெக்கெட் அணியும் ரணில் ! மைத்ரியை பின்பற்றி அதிரடி…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடத் தயாராகியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரசாரத்தின்போது அணியவேண்டிய ஆடை வகை என்ன என்பதை அவரின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி – இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணியும் வகையிலான – கடந்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்ரி அணிந்த வடிவிலான ஆடையை அணிந்தே வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரணில் பிரசாரம் செய்யவுள்ளார்.

ரணில் கடந்த வாரம் அலரி மாளிகையில் தனது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டபோது இதே வடிவிலான ஆடையை பிரதமர் அணிந்துவந்ததாகவும் ,அதன்மூலம் அவர் மறைமுகமாக வேட்பாளர் தாம் தான் என்பதை சொல்லிவிட்டாரென்றும் பிரதமருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.