இலங்கை

மோடி சம்பந்தன் மற்றும் மகிந்தவையும் சந்திப்பார்.

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 9ம் திகதி இலங்கை வருகிறார்.

அவர் இலங்கையில், ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ஆகியோருடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனையும் சந்திப்பார்.

இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோக்கலே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயம் குறுகிய கால விஜயமாக அமைவதுடன், பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இலங்கை வரும் முதலாவது வெளிநாட்டு தலைவராகவும் மோடி பதிவாகிறார்.