இலங்கை

மோடியின் விஜயத்தில் ரணிலுக்கு ‘செக்’ வைத்த மைத்ரி !

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஞாயிறு கொழும்பு வரும்போது அவரை வரவேற்க அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி மைத்ரி நியமித்திருப்பது பிரதமர் ரணிலுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாக அறியமுடிந்தது.

குறுகியகால விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வரும் மோடி கொழும்பில் 4 மணி நேரம் மட்டுமே தங்கியிருப்பார்.அந்தக் காலப்பகுதியில் அவர் ஜனாதிபதி ,பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இந்நிலையில்,பிரதமராக தாம் நாட்டில் இருக்கும்போது அமைச்சர் சஜித் பிரேமதாசாவை இந்திய பிரதமரை வரவேற்க நியமித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் விசனம் தெரிவித்துள்ள பிரதமர் ரணில்,பிரதமர் மோடி மைத்திரியை பார்க்க வரவில்லையென்றும் அவர் இலங்கையின் நிலைமையை பார்க்கவே வருகிறாரென்றும் கடுந்தொனியில் தெரிவித்துள்ளாரென அறியமுடிந்தது. .