Breaking News

மோசமான மத்திய, பின்வரிசை துடுப்பாட்டம், பரிதாபமாக தோற்ற இலங்கை.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 335 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 45.5 ஓவர்களில் 247 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

இதன்படி அவுஸ்திரேலியா 87 ஓட்டங்களால் வென்றது.

இலங்கைக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கட்டுகளை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது.

ஏரன் ஃபின்ச் 153 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலளித்தாடிய இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் விரைவாக ஓட்டங்களைப் பெற்றனர்.

10 ஓவர்களில் 87 ஓட்டங்களைப் பெற்று இந்த தொடரில் முதல் 10 ஓவர்களில் பெறப்பட்ட கூடுதலான ஓட்டங்களாகவும் பதிவானது.

கருணாரட்ன 97 ஓட்டங்களுடனும், குசல் பெரேரா 52 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அவர்களின் பின்னர் விக்கட்டுகள் சரமாரியாக விழவே, இலங்கை அணி தோல்வி கண்டது.