உலகம்

மோசமடையும் நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலைபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலை மீக மோசமான நிலைமைக்கு சென்றுள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து லாகூர் வைத்தியசாலையில் உயிருக்கு போராடும் நவாஸ் ஷெரீப்புக்கு 8 வாரகாலம் பிணை வழங்கி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் முதல் அவர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

69 வயதான நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை தற்போது மோசமடைந்ததையடுத்து அவருக்கு விசேட சிகிச்சை அளிப்பதற்காக பிணை வழங்கப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரீப்புக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்குமாறு பஞ்சாப் மாநில அரசாங்கத்திற்கு பிரதமர் இம்ரான்கான் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.