விளையாட்டு

மொஹமட் அமீரின் உலக கிண்ண வாய்ப்பு சிக்கலில்?

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர், உலக கிண்ணத் தொடரில் விளையாடுவது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் சுகவீனம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்படுகிறது.
எனினும் எதிர்வரும் இரண்டு தினங்களின் பின்னரே அவரது நோய் தன்மை குறித்து உறுதியான மருத்துவநிலைப்பாடு அறிவிக்கப்படும்.
இதன் அடிப்படையிலேயே அவர் உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.