உலகம்

மொஸ்கோவில் நூற்றுக்கணக்கானோர் கைது

 

மொஸ்கோவில் இடம்பெற்ற பேரணி ஒன்றின் போது நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊழல் எதிர்ப்பு ஊடகவியலாளரான ஐவன் கொலுனோவை பொலிசார் கைது செய்து தடுத்து வைத்தமைக்கு எதிராக இந்த பேரணி நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஊடகவியலாளர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் மத்தியில் ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியும் உள்ளார்.

எவ்வாறாயினும், மக்கள் எதிர்ப்பை அடுத்து, கொலுநோவ் மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு கைவிடப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.