இலங்கை

மைத்ரி – ராஜித்த மூடிய அறைக்குள் பேச்சு ! புதிய ட்விஸ்ட்..

 

அனுராதபுரத்துக்கு இன்று பல வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க சென்றார் ஜனாதிபதி மைத்ரி.. அதுவல்ல செய்தி..
கொழும்பில் இருந்து மைத்ரியுடன் சுகாதார அமைச்சர் ராஜித்தவும் ஹெலிகொப்ரரில் ஒன்றாக சென்றார்…

அனுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருவரும் மூடிய அறைக்குள் பேச்சு நடத்தியதாக தகவல்..

பின்னர் நிகழ்வு முடிந்த பின்னர் ஒன்றாகவே கொழும்புக்கு இருவரும் ஹெலியில் வந்தனர்.

தற்போதைய கொழும்பு அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம்மிக்க ஒன்றாக கருதப்படுகிறது.

அண்மைக்கால அரசியல் நிகழ்வுகளால் மைத்திரியும் ராஜித்தவும் ஒன்றாக நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருவதை தவிர்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளர் பதவி சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.