Breaking News

மைத்ரி – மஹிந்த தீர்க்கமான பேச்சு !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது.

அரசியல் கூட்டணி மற்றும் இதர முக்கியத்துவம் மிக்க விடயங்கள் குறித்து இறுதியான முடிவொன்றை எடுப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் அரசியல் கூட்டணி தொடர்பான இருதரப்பு பேச்சுக்கள் நடைபெறவுள்ள மே 9 ஆம் திகதிக்குள் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிகிறது.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து இந்த சந்திப்பில் ஒரு முடிவு எடுக்கப்படலாமென அறியமுடிந்தது.