Breaking News

மைத்ரி – மஹிந்த திடீர் மந்திராலோசனை !

 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுக்குமிடையில் முக்கியமான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் சுமார் ஒரு மணிநேரம் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர் .

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக புலனாய்வுத்துறை மற்றும் இதர வட்டாரங்கள் மூலம் அறியவந்துள்ளதாக இங்கு குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அது தொடர்பில் தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்ததாக அறியமுடிந்தது.

தேவைப்பட்டால் கோட்டாவுக்கு தேவையான மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கமுடியுமெனவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டதாக மேலும் தெரியவந்தது.