இலங்கை

மைத்திரியின் கோரிக்கையை கடாசித்தள்ளி நாளை கூடுகிறது தெரிவுக்குழு !

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு இரத்துச் செய்யப்படவேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு ஏற்கனவே திட்டமிட்டபடி தெரிவுக்குழுவில் கூட்டம் நாளை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது

காத்தான்குடி பள்ளிவாசல்களின் சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் நாளை சாட்சியமளிக்கவுள்ளனர்.

அதேசமயம் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இருவர் விரைவில் சாட்சியமளிக்க தெரிவுக்குழுவால் அழைக்கப்படவுள்ளனர்.

முன்னதாக – தெரிவுக்குழு இரத்துச் செய்யப்படும் வரை அமைச்சரவையை கூட்டப்போவதில்லையென்று ஜனாதிபதி அண்மைய அவசர அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.