Breaking News

மைத்திரிக்கு பதிலடி கொடுத்தார் மஹிந்த – சீன நிதி மோசடி குற்றச்சாட்டு குறித்து விசேட அறிக்கை !

தாமரைக் கோபுர திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்ரி முன்வைத்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச , சீன தூதுவரை முன்னால் வைத்துக்கொண்டு சீனாவுக்கு அவமதிப்பை ஏற்படுத்திய வகையிலான குற்றச்சாட்டே அதுவென சாடியுள்ளார்.

எந்த நிதி மோசடியும் இடம்பெறவில்லை என்று விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மஹிந்த , இது அரசியல் ரீதியில் கடந்த காலங்களில் பூசப்பட்ட சேறு போன்றதென குறிப்பிட்டுள்ளார்.