Breaking News

” மேலதிக பாதுகாப்பெல்லாம் தேவையில்லை” – நிராகரித்தார் அனுரகுமார !

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு கூடுதலான பாதுகாப்பை வழங்க பாதுகாப்பமைச்சு தீர்மானித்துள்ளது.

பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ச ,சஜித் பிரேமதாச ஆகியோருக்கு 215 பேர் மேலதிக பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமக்கு வழங்கப்படும் பாதுகாப்பானது போதுமானதென ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.