உலகம்

மேற்கு பப்புவாவில் வன்முறை 27 பேர் பலி

இந்தோனேசியாவின் பிராந்தியமான மேற்கு பப்புவாவில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள், பெரும்பாலும் உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் நகரத்தின் பல கட்டிடங்களுக்கு தீ வைத்ததை அடுத்து  வன்முறை சூழல் ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய தலைநகர் வமேனாவில் ஏற்பட்ட வன்முறைகளால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு ஆசிரியரின் இனவெறி கருத்துக்களால் ஆர்ப்பாட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டதாக  கூறப்படுகிறது  எனினும் பொலிஸார் இதனை மறுத்துள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் இந்த பிராந்தியத்தில் அமைதியின்மை ஏற்பட்ட நிலையில், சமீபத்திய வன்முறையாக இது பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தேடுதல் தொடர்கின்ற நிலையில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாகாண தலைநகர் ஜெயபுராவில் இடம்பெற்ற சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.