விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றி இலக்கு 269

 

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான லீக் போட்டி தற்போது இடம்பெறுகிறது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

கோலி 72 ஓட்டங்களையும் தோனி 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற 269 ஓட்டங்களைப் பெற வேண்டும்.