விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் செல்ல உள்ள இந்திய அணி தலா மூன்று ‘ருவென்டி- 20’, மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில், ‘டுவென்டி-20 தொடர் நடக்கிறது. முதல் இரு போட்டிகள் (ஆக.,3,4) அமெரிக்காவின் புளோரிடாவில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று(ஜூலை 21) நடந்தது. இதன் பின்னர், இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அணித் தலைவராக கோஹ்லி தொடர்கிறார். இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை.

அணி விபரம்
டெஸ்ட் தொடர்

கோஹ்லி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), மயங்க் அகர்வால், கேஎல்.ராகுல், சி புஜாரா, ஹனும விஹாரி, ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட்(கீப்பர்) விர்திமான் சாஹா(கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்

ஒரு நாள் அணி

விராட் கோஹ்லி(கேப்டன்), ரோகித் சர்மா(துணை கேப்டன்) ஷிகார் தவான், கேஎல்ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட்(கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹால், கேதார் ஜாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி,

ருவென்டி -20 அணி

கோஹ்லி(கேப்டன்), ரோகித் சர்மா(துணை கேப்டன்), தவான், கேஎல்ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட்(கீப்பர்) குருனால் பாண்ட்யா, ரவீந்தர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹார், நவ்தீப் சைனி.