உலகம்

மெய் பாதுகாவலராலேயே சுட்டுக்கொல்லப்பட்ட எத்தியோப்பிய இராணுவ பிரதானி

எத்தியோப்பியாவின் இராணுவப் படைகளின் பிரதானி சீரே மெக்கினன் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

தலைநகர் அடிஸ் அபாபாவில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றது.

அவரும் அவருடைய மற்றுமொரு பாதுகாவலரும் சம்பவத்தில் உயிரிழந்ததாக அந்த நாட்டின் பிரதமர் உறுதி படுத்தியுள்ளார்.

சம்பவத்தை அடுத்து பலர் கைதாகி இருப்பதாகவும், நாட்டு மக்கள் அமைதியை கடைபிடிக்குமாறும் பிரதமர் கேட்டுள்ளார்.