விளையாட்டு

மெத்யூஸின் அபாரமான சதத்துடன் நிறைவுக்கு வந்த முதல்நாள் ஆட்டம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேம்ஸ் என்டர்சன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

நாளை போட்டியின் இரண்டாம் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.