உலகம்

மெக்சிகோவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை – ட்ரம்ப்

 

மெக்சிகோவின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தாம் அறிவித்த 5 சதவீத வரி அதிகரிப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெக்சிகோ எல்லை ஊடாக சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கும் நிலைமை அதிகரித்துள்ளது.

இதனை தடுப்பதற்கு மெக்சிகோ போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதே ட்ரம்பின் வாதமாக உள்ளது.

எனினும் இரண்டாம் கட்டமாக இன்றும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.