உலகம்

மெக்சிகோவிற்கு அமெரிக்கா காலக்கெடு

மெக்சிகோ ஊடாக அமெரிக்காவிற்குள் செல்லும் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு, மெக்சிகோவிற்கு அமெரிக்கா 45 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

உத்தேச எண்ணிக்கை எதுவும் தீர்மானிக்கப்படவில்லை எனினும், குடியேறிகளை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை மெக்சிகோ அமுலாக்கியுள்ளது.

மெக்சிகோ ஊடாக சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவிற்குள் செல்லும் நிலைமை அதிகரித்திருப்பதால், அந்த நாட்டின் பொருட்கள் மீதான வரியை மாதாந்தம் 5 சதவீதத்தால் அதிகரிக்கவிருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து மெக்சிகோ குடியேறிகளை கட்டுப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளது.